இலங்கை அரசியலமைப்புப் பேரவையில் மஹிந்த ராஜபக்ஷவை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவே நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக நாடாளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சபாநாயகர் அதி விரைவில் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ல இடைக்காலக் கணக்கறிக்கைக்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.