Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரி வெளியிட்டார் உத்தியோக பூர்வ அறிவிப்பை

மைத்திரி வெளியிட்டார் உத்தியோக பூர்வ அறிவிப்பை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இன்றையதினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.

அதற்கமைய இன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.

அதற்கமைய இன்று முதல் ஐக்கிய தேசிய கட்சியின் பிரிவினைகள் ஆரம்பிக்கும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஒருவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படாதெனவும் கூட்டத்தில் கந்து கொண்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட மஹிந்த, இன்றைய தினம் அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கைக்கு இணக்கம் வெளியிட்ட ஜனாதிபதி இன்றைய தினம் அமைச்சரவையை நியமிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

அவர்களை அரசாங்கம் செய்ய விடுவோம். செய்யவிட்டு என்ன நடக்கின்றதென பார்ப்போம். அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது. மக்கள் எம்முடனே உள்ளனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போது விரைவில் தேர்தலுக்கு சென்று விடுவோம் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவை பற்றிய முழுமையான விபரம் சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள இந்த அமைச்சரவையின் அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv