நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. அதேநேரம் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இத்துடன் நாடாளமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்தராஜ பக்சவும், எதிர்க்கட்சி அமைப்பாளராக மஹிந்த அரவீரவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மஹிந்த தரப்பினர் சுதந்திரக்கட்சியிலிருந்து நீங்கியதால் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கக் கூடாது என அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





