Sunday , April 20 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ரஜினியை சீண்டிய தமிழிசை

ரஜினியை சீண்டிய தமிழிசை

நடந்து முடிந்துள்ள 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தர் முடிவுகள் வெளிவந்த அன்று தமிழிசை சவுந்தர்ரஜன் கொடுத்த புதுவிளக்கமான வெற்றிகரமான தோல்வி என்பது தன் கட்சி தொண்டர்களை தேற்றுவதற்கும், தோல்வியின் தழும்புகளை மறைப்பதற்கானதாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் மீண்டும் ஒரு விளக்கம் கொடுத்து உள்ளார்.

அதில் மோடியின் அலை ஒயவே ஓயாது என்று கூறியவர் தேர்தல் தோல்வியை ரஜினியின் படத்துடன் ஒப்பிட்டு அவர் கூறியதாவது: ரஜினியின் ஒரு படம் ஓடவில்லை என்றால்,அவரது செல்வாக்கு சரிந்து விட்டது என சொல்லமுடியாது. அடுத்த படம் ஓடும் இவ்வாறு அவர் கூறினார்.

தமிழிசை பாஜகவின் 5 மாநிலதேர்தல் தோல்விக்கு, ரஜினியின் படத்துடன் ஒப்பிட்டு பேசியதை ரஜினியின் ரசிகர்கள் பலமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv