Thursday , August 21 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சுமந்திரன் விரைவில் கைது!! ஜனாதிபதி மைத்திரி அதிரடி

சுமந்திரன் விரைவில் கைது!! ஜனாதிபதி மைத்திரி அதிரடி

தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.எ சுமந்திரன் அவர்களை கைது செய்வதற்குறிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் பாதுக்காப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியின் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது…

நேற்றைய தினம் வவுனியா நகரமண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்ட சுமந்திரன் அவர்கள் உரையாற்றும் பொழுது இலங்கை சோசலிச குடியரசின் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை பொது அரங்கில் ஒருமையில் பேசியிருந்தார் என்றும்

இவ்விடயமானது ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கையின் முதல் பிரஜையான ஜனாதிபதியை பொது அரங்கில் இழிவாக பேசியதற்காகவும் ஜனாதிபதியை அவமானப்படுத்தியதற்காகவும் ஜனாதிபதியின் சிறப்புரிமை சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கபடுவதாக ஜனாதிபதியின் ஊடக வட்டாரங்கள் மூலம் அறியப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv