இந்திய புலனாய்வு அமைப்பான ரோவிடம் பணம் பெறும் இரு அமைச்சர்களின் விபரங்களை ஜனாதிபதியும் பிரதமரும் வெளியிடவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில அமைச்சர்கள் ரோவிடமிருந்து பணம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது உண்மையானால் இதுவொரு தேசிய பிரச்சினை என தெரிவித்துள்ளார்.
அதேவேளை இது சர்வதேசரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ள நாமல்ராஜபக்ச இந்த அமைச்சர்களை அம்பலப்படுத்தவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரோ தன்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதை ஜனாதிபதி அம்பலப்படுத்தியுள்ளார்,இந்திய ஊடகம் இது குறித்து செய்தி வெளியிட்டவேளை அவர் அதனை நிராகரித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச எனினும் தற்போது அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சரவையில் இரு ரோ அமைச்சர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இவற்றிற்கு இடையில் தொடர்பிருக்கலாம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இதில் ஏதோ உண்மையும் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





