Tuesday , August 26 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்! 82 பேர் பலி.. இலங்கைக்கு பாதிப்பா?

இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்! 82 பேர் பலி.. இலங்கைக்கு பாதிப்பா?

இந்தோனேஷியாவில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 82 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.

கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் இந்தோனேஷிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையிலேயே இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv