Wednesday , August 27 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / பறந்துகொண்டிருக்கையில் நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்: 2 பேர் பலி

பறந்துகொண்டிருக்கையில் நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்: 2 பேர் பலி

தென்னாபிரிக்க உள்நாட்டு விமானத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக அதன் இறக்கைகள் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த இரண்டு பயணிகள் இறந்துவிட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

விமானம் பறந்துகொண்டிருக்கையில் , விமானத்தின் உட்பக்க பாகங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திடீர் என்று எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே விமானத்தின் இறக்கை தீ பிடித்துள்ளது.

விமானத்தின் ஒரு பக்க இறக்கை தீ பிடித்து இருக்கிறது. இதனால் 2 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அறிக்கை வெளியாகி உள்ளது.

விமானி சாதுர்யமாக செயல்பட்டு வெற்றிகரமாக மீண்டும் விமானம் இறக்கப்பட்டது. ஆனாலும் உள்ளே இருந்த பயணிகள் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மற்ற பணியாளர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் இரண்டு பேர் பலியாகி இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv