Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / பயங்கரவாதம்! – நாடு ழுழுவதிலும் இருந்து 10 பேர் ஒரே இரவில் கைது!!

பயங்கரவாதம்! – நாடு ழுழுவதிலும் இருந்து 10 பேர் ஒரே இரவில் கைது!!

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 10 நபர்கள், சனிக்கிழமை (ஜூன் 23) இரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் (ஜூன் 24) நாடு முழுவதிலும் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சின் பயங்கரவாத தடுப்புப்பிரிவு இந்த ‘ஒப்பரேஷ’னை முன்னெடுத்தது. குறித்த நபர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல் முயற்சி ஒன்றுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் கடந்த ஜூன் 14 ஆம் திகதி ஆரம்பமானது. கைது செய்யப்பட்டவர்களின் திட்டங்கள் குறித்து தெளிவாக எதையும் அறியமுடியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் 96 மணிநேரங்கள் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

உள்துறை அமைச்சர் Gérard Collomb, DGSI படையினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பயரங்காரவாதம் தொடர்பாக தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதற்கும், செயற்படுவதற்கும் அவர் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv