Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / டிடிவி தினகரனின் மாஸ்டர் தான் ஸ்டாலின்

டிடிவி தினகரனின் மாஸ்டர் தான் ஸ்டாலின்

டிடிவி தினகரனும் திமுகவும் மறைமுகமாக இணைந்து செயல்பட்டு வருவதாக கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை அவ்வப்போது தினகரனும் மறுத்து வருகிறார். இந்த நிலையில் டிடிவி தினகரனின் மாஸ்டரே திமுக செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து மேலும் கூறியதாவது: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை சபரிமலையின் 18 படிகள் என்று கூறியுள்ளார் தினகரன். இவரென்ன சபரிமலை சாமியா? புலிப்பால் குடித்துவிட்டு வந்த சபரிமலை அய்யப்பன் இல்லை இவர், மனப்பால் குடித்து கொண்டிருக்கும் தினகரன்.

காவிரி பிரச்சனை குறித்து தினகரன் பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. அதேபோல் சட்டமன்றத்தில் பேசும்போது எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு தனது உரையில் மரியாதை செலுத்தியதும் கிடையாது. திமுகவின் குரலை மட்டுமே தினகரன் பிரதிபலித்து வருகிறார். இவருடைய மாஸ்டர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv