டெல்லியில் 6வது நாளாக போராடிவரும் விவசாயிகளை சந்தித்து கனிமொழி ஆதரவு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
டெல்லியில் 6வது நாளாக போராடிவரும் விவசாயிகளை சந்தித்து கனிமொழி ஆதரவு!

டெல்லி ஜந்தர் மந்தரில் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 6வது நாளாக விவசாயிகள் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் நாள்தோறும் பல நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி போராட்டக்காரர்களை சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்துக்கொண்டார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் இந்த நிலைமைக்கு காரணம் தமிழக அரசு தான் என்றும் தக்க சமயத்தில் தமிழக அரசு விவசாயிகளின் பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு செல்லவில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும் போராடிக் கொண்டு இருக்கும் விவசாயிகள் குறித்து பாராளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்புவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Tamil Technology News

 

Tamilnadu News