காவிரி விவகாரம் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறினார்.
காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் மக்களை சென்று சந்திக்க உள்ளதாக கூறிய கமல்ஹாசன், மே 19-ஆம் தேதி விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், மக்கள் பிரச்னைக்காக கட்சிகளைத் தாண்டி அனைவரும் ஒரே அணியில் நிற்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.