Friday , August 22 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அன்னையர் தினத்தன்று தாயுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஸ்டாலின்

அன்னையர் தினத்தன்று தாயுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அன்னையர் தினமான இன்று தனது அன்னையை நேரில் சந்தித்து இன்று ஆசி பெற்றார்.

உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலப்புரத்தில் உள்ள தனது தாயை நேரில் சந்தித்து அவருக்கு புது புடவையைப் பரிசாக வழங்கி, இனிப்பு ஊட்டி, அவருடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் அன்னையர் தினத்தையொட்டி கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தேன்.

இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்தி போற்றி மகிழ்ந்திடுவோம்! என கூறியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமுக வலைதளங்களில் வைராகிவருகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv