இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை ஏவுகணை தாக்குதல் – மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை எவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரமடையலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கோலான் குன்றிலுள்ள இஸ்ரேலிய தளங்களை நோக்கி ஈரானிய படையினர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.சிரியாவிலிருந்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஈரான் 20 எவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இவற்றில் பலவற்றை நடுவானில் அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.