கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் ராஜஸ்தானில் முகாம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் ராஜஸ்தானில் முகாம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படம் முடிந்தது. இதன் டிரைலர் வெளியானது. இதையடுத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடிக்கிறார் கார்த்தி. சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் ஜெய்சாலமர், பூஜ் பகுதிகளில் நடக்கிறது. ‘கதைக்கு என்ன தேவையோ அந்த லொகேஷன் பொருத்தமாக கிடைத்துள்ளது. முக்கிய காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளது.

ஹைவே ஆக்ஷன் காட்சி ஒன்றும் பூஜ் பகுதியில் காட்சிப் படுத்தப்படுகிறது. மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது’ என படக்குழு கூறியது. கார்த்தியுடன் ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யூ, போஸ் வெங்கட் நடிக்கின்றனர். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர். ஒளிப்பதி பொறுப்பை சத்யன் சூரியன் ஏற்கிறார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites