Tuesday , October 14 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஆப்கானிஸ்தானில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்: 21 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்: 21 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனம் அருகே நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனத்தின் அருகில் தற்கொலைப்படையினரால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மற்றோரு குண்டும் வெடித்தது. அப்போது அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், பத்திரிக்கையாளர்கள் இருந்தனர்.

இதனால் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கிடைத்த தகவலின்படி தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv