Thursday , November 21 2024
Home / அரசியல் / சுவீடன் நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றார் பிரதமர் மோடி

சுவீடன் நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றார் பிரதமர் மோடி

5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி சுவீடன் பயணத்தை முடித்துகொண்டு பிரிட்டன் வந்தடைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் போய்ச் சேர்ந்தார்.

அவரை அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லோப்வென், விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சுவீடன் நாட்டின் மன்னர் 16-ம் காரல் கஸ்டாபை நேற்று சந்தித்து பேசினார். பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வெனும் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர் சுவீடன் நாட்டில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரிட்டன் வந்தார்.

ஹீத்ரோ விமானநிலையம் வந்த பிரதமர் மோடியை பிரிட்டன் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் வந்து வரவேற்றார். மோடி, இன்று பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv