Thursday , November 21 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / மடகாஸ்கர் நாட்டில் புயலுக்கு 3 பேர் பலியாகினர் – 7 லட்சம் பேர் தவிப்பு

மடகாஸ்கர் நாட்டில் புயலுக்கு 3 பேர் பலியாகினர் – 7 லட்சம் பேர் தவிப்பு

மடகாஸ்கர் நாட்டில் புயலுக்கு 3 பேர் பலியாகினர் – 7 லட்சம் பேர் தவிப்பு

ஆப்பிரிக்க கண்டத்துக்கு அருகே இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் என்ற தீவு நாடு உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடும் வறட்சியும் அதைத் தொடர்ந்து உணவு தட்டுப்பாடும் நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று அங்கு எனாவோ என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. முன்னதாக இப்புயல் மடகாஸ்கரின் வடகிழக்கில் உள்ள அன்டாலாகா பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 290 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் மழையும் அதனால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரோன்ட் செட்ரா மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். மூடிக்கிடந்த மண்ணை அகற்றி பலரை மீட்டனர். இருந்தும் 3 பேர் பலியாகினர். அவர்களில் 2 பேர் குழந்தைகள். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். நிலச்சரிவில் இப்பகுதியில் உள்ள 4 பள்ளிகள் இடிந்து சேதமடைந்தன.

புயல் மழை காரணமாக அன்டாலாகா மற்றும் கேப் மசோயலா பகுதிகளில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்புயலுக்கு 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செஞ்சிலுவை சங்கம் சார்பில் 500 தன்னார்வு தொண்டு ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …