Monday , November 18 2024
Home / ஆன்மிகம் / சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையின் சிறப்பு

சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையின் சிறப்பு

அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே மூன்றாம் பிறையை காணவேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது மூன்றாம் பிறை.இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை ஆயிரம் பிறை கண்டவர் என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.

குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையை பார்த்தால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும் எனவும் கூறியுள்ளார்கள்.

காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே, இந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும். இதற்காகவே பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக ‘சந்திர தரிசனம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv