இந்தியாவில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகிறது – தெற்கு ஆசியாவில் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை
தெற்கு ஆசியாவிற்கு செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண அறிவுரை வழங்கி உள்ள அந்நாட்டு அரசு இந்தியாவில் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிப்பு தொடர்பாக டொனால்டு டிரம்ப் உத்தரவில் மாற்றம் தொடர்பான மறு அறிவிப்பு வெளியாகிய நிலையில் இந்நகர்வு ஏற்பட்டு உள்ளது. “ பயங்கரவாத இயக்கங்கள் நிறுவப்பட்டு உள்ளன, பழங்குடியின பிரிவுகள் மற்றும் பிற பயங்கரவாத இயக்கங்களால் பாகிஸ்தானில் அமெரிக்கர்களுக்கு ஆபத்து எழுந்து உள்ளது,” என உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு விடுத்து உள்ள அறிவிப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளது.
“பயங்கரவாத குழுக்கள் இந்தியாவிலும் செயல்பட்டு வருகின்றன என அவசரச் செய்தி கோடிட்டு காட்டுகிறது. பயங்கரவாதிகள் பலவிதமான தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கல்வி நிறுவனங்களும் இலக்காக்கப்பட்டு உள்ளது,” என அமெரிக்கா விடுத்து உள்ள எச்சரிக்கையில் பயங்கரவாத இயக்கத்தின் பெயரினை குறிப்பிடவில்லை. தெற்கு ஆசியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் எனவும் வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கர்கள் செல்வதையும் தவிர்க்கவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.










