பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கான இலங்கையின் முயற்சிக்கு, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹிட் அஹமட் ஹஷ்மத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
”இலங்கையும், பாகிஸ்தானும் ஒரு வலுவான உறவைக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நலன்களால் குறிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை இந்த உறவின் முக்கிய தூணாகும்.
இதேவேளை, பாகிஸ்தான் குடியரசு தினத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டமை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவிற்கு சான்றாகும்” என்றார்.
………………