Saturday , November 16 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நல்லாட்சி அரசுக்கு முடிவுகட்ட கண்டியிலிருந்து கொழும்புக்கு நடைபவனி

நல்லாட்சி அரசுக்கு முடிவுகட்ட கண்டியிலிருந்து கொழும்புக்கு நடைபவனி

நாட்டின் தேசிய சொத்துக்களை சூரையாடும் கூட்டணி அரசுக்கு முடிவுகட்ட பாரிய நடை பவனியொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி கண்டியிலிருந்து கொழும்புக்கு பேரணியாக வரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் கையெழுத்துக்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நல்லாட்சியின் மூலம் ஜனநாயக சீர்த்திருத்தமொன்றை மக்கள் எதிர்பார்த்த போதிலும், இன்றுவரை எவ்வித எதிர்பார்ப்புகளும் பூர்த்திசெய்யப்படாத நிலையிலேயே மக்கள் இவ்வாறு வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மைத்திரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மத்திய வங்கியை கொள்ளையடித்த சூத்திரதாரிகளை உடனடியாக கைதுசெய்யுங்கள், வாழ்க்கை செலவுகளை குறையுங்கள், அரச சொத்துக்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்வதை நிறுத்துங்கள், இளைஞர்- யுவதிகளின் வேலையின்மை பிரச்சினைக்கு பதிலளியுங்கள் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாட்டில் பலமான பொருளாதார கட்டமைப்பை நிறுவும் வல்லமை கொண்ட பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கும் இந்த நடை பவனி மூலம் அழுத்தம் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv