Saturday , November 16 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கைக்கான வரிச்சலுகையை மீண்டும் அங்கீகரித்தது அமெரிக்கா

இலங்கைக்கான வரிச்சலுகையை மீண்டும் அங்கீகரித்தது அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்கும் திட்டத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த வரிச்சலுகைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

நடப்பு வருடத்திற்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் கடந்த 23ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதாகவும், அதில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுவந்த அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையானது, கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி காலாவதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …