அப்பாடா தலைவர் வாயை திறந்துவிட்டாரா! ரஜினி இப்போவது பேசினாரே

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சில நாட்களுக்கு முன் இமயமலை சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பிவிட்டார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது.

சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அவரது போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இமயமலை பயணம் புத்துணர்வு அளிக்கிறது. இனி 16 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வது நடக்கும்.

புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டு மிராண்டத்தனமானது. ரதயாத்திரையின் போது மத கலவரத்திற்கு இடமளிக்காமல் போலிஸார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை இருக்கிறது என அவர் கூறினார். மேலும் என் பின்னால் மக்களும், கடவுளும் தான் இருக்கிறார்கள். பி.ஜே.பி கிடையாது என கூறினார்.