இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை செயற்படுத்த அரசியலமைப்பு அனுமதிக்காது: பிரதமர் ரணில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை செயற்படுத்த அரசியலமைப்பு அனுமதிக்காது: பிரதமர் ரணில்

இலங்கை போன்ற சுதந்திரமான நீதித் துறை உள்ள நாட்டில் கலப்பு நீதிமன்றம் சாத்தியமற்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றி பிரதமர்,

இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகளில் கலப்பு நீதிப் பொறிமுறையை உள்வாங்க வேண்டுமாயின் அரசியலமைப்பு மாற்றத்தின் மூலமே சாத்தியமாகும். அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் கலப்பு நீதிமன்ற பொறிமுறை அடங்கிய அரசியலமைப்பிற்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என்பதுதான் யதார்த்தம்.

எனவே, எல்லோரும் பின்பற்றக் கூடிய மாற்று வழிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகின்றது எனவே, எல்லோரும் ஒன்றிணைந்து சிறந்த ஓர் மாற்று வழியை பரிந்துரை செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் இப்போது இருப்பதாகவே கருதுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites