Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பிரிந்து நின்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – மைத்திரி

பிரிந்து நின்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – மைத்திரி

பிரிந்து நின்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – மைத்திரி

பிரிந்து சென்று செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள் தமக்கிடையில் சந்தேகங்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என வலியுறுத்திய மைத்திரிபால சிறிசேன, அனைத்து மக்களும் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற ஒரு புதிய குறைகேள் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகதை திறந்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வேலைத்திட்டம் ஊடாக வட மாகாண மக்களுக்கும் தமக்கும் இடையில் நெருக்கம் ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.

(ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற இந்த வேலைத்திட்டம் ஊடாக வட மாகாண மக்களுக்கும் யாழ்ப்பாண மக்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு நெருங்கிய இறுக்கமும் உறவும் ஏற்படுகின்றது.நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் பிரிந்துசெல்லக் கூடாது.நாங்கள் எப்போதும் கைகோர்த்து ஒன்றாக இருக்க வேண்டும்.அவ்வாறு ஒற்றாக இருக்கும் போது எங்களுக்கு இடையில் காணப்படும் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள முடியும்.

பிரிந்துசென்றால் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள முடியாது.பிரிந்து சென்றால் மற்றவர்களை நாங்கள் தவறாகவே பார்க்கின்றோம்.இந்த புதிய வேலைத்திட்டம் ஊடாக மக்களின் அபிவிருத்தி, துன்ப துயரங்கள், ஏனைய கோரிக்கைகளை முன்வைத்தால் அது தொடர்பான தகவல்கள் எனக்கு கிடைக்கும். எமக்கிடையில் சந்தேகங்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.இந்த பிரதேசத்தில் நீண்டகாலமாக நீடித்த யுத்தம் நிறைவுபெற்று எட்டு வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

ஆனால் இன்னும் பிரச்சினை உள்ளது.யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் சென்ற போதிலும் நாட்டில் வாழும் மக்கள் உள்ளத்தால் இதுவரை ஒன்றுபடவில்லை.உள்ளத்தால் ஒன்றுபடவில்லையாயின் ஏனைய எந்தவொரு விடயங்களைச் செய்தாலும் அது சரியாகாது.

அபிவிருத்தி பணிகள் குறித்து ஆராய்வதற்காக அடுத்துவரும் மூன்று நான்கு மாதங்களில் ஒரு தடவையேனும் தாம் வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

(இந்த நாட்டிலுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து நாங்கள் நேர்மையாக சிந்திக்க வேண்டும்.அதற்காக அரசியல் கட்சி, பிரதேசவாதம், மொழி, மதம் சார்ந்து சிந்திக்க கூடாது.வட பகுதியிலுள்ள பிரச்சினைகள் போன்று நாட்டில் ஏனைய பிரதேசங்களிலும் காணப்படுகின்றன.வேலையில்லா பட்டத்தாரிகள் எதிர்ப்பு வெளியிடுவதை விடுத்து என்னுடன் வந்து பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.அப்போது அவர்கள் மீது அன்பு பாசம் எனக்கு ஏற்படும்.

அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்பதற்காக அவர்கள் மீது எனக்கு கோபம் எதுவும் இல்லை. எதிர்ப்பு வெளியிடுவதை விடுத்து என்னுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதையே நான் விரும்புகின்றேன். மாவை சேனாதிராஜா கூறிய விடயங்களை வேறு விதமாகவே நான் சிந்தித்தேன்.வடபகுதிக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு புதிததாக அபிவிருத்திக்கான வேலைத்திட்டமொன்றை வரைந்து செயற்படுத்துவதே சிறந்தது என நான் எண்ணுகின்றேன்.

நாங்கள் இன்று இருப்பதை விட மிகவும் நெருக்கமாக செயற்பட வேண்டும். அதன்பிரகாரம் அடுத்த மூன்று நான்கு மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு தடவை யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதற்கு தீர்மானித்துள்ளேன்.இவ்வாறான மிகப் பெரிய விழாக்களில் கலந்துகொள்வதற்காக நான் வரப் போவதில்லை.கொழும்பில் இருந்து ஏனைய அமைச்சர்களையும் வட மாகாண தமிழ் மக்கள் பிரதிநிதிகளையும் அரச நிறுவன அதிகாரிகள் என அத்தனை பேரையும் அழைத்து வந்து அபிவிருத்தி பணிகளை இருப்பதை விட சிறப்பாக முன்னெடுப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …