தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை – அருண் ஜெட்லி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை – அருண் ஜெட்லி

தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை என நிதியமைச்சர் அருண் ஜெட்லி வேதனை தெரிவித்தார்.

சர்ச்சை:

உ.பி., சட்டசபைத் தேர்தலின் ஆறாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை(மார்ச் 4) நடைபெறுகிறது. இந்நிலையில் வாரணாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: தேசியவாதம் என்ற விவாதத்தை எதிர்கட்சிகள் தான் துவக்கி வைத்தன. டில்லி ராம்ஜாஸ் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடந்த மோதலை, தேசியவாதம் தொடர்பான சர்ச்சையாக எதிர்க்கட்சிகள் தான் மாற்றின.

கெட்ட வார்த்தை:

தேசியவாதம் எனபது மிகச்சிறந்த வார்த்தை. ஆனால் அந்த வார்த்தையானது, இந்தியாவில் மட்டுமே கெட்ட வார்த்தையாக கருதப்படுகிறது இது மிகவும் கவலையளிக்கிறது. இவ்வாறு அவர் வேதனை தெரிவித்தார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites