மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்திற்கு மின்னிணைப்பு வசதிகள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்திற்கு மின்னிணைப்பு வசதிகள்

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை மற்றும் அந்தோனியார்புரம் ஆகிய பிரதேசங்களில் மின்னிணைப்பு வசதிகளை இன்று (வியாழக்கிழமை) வட.மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் வழங்கிவைத்தார்.

ரூபி முன்பள்ளி, அந்தோனியார்புரம் முன்பள்ளி, அந்தோனியார்புரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியர் விடுதி ஆகியவற்றிற்கான மின்னிணைப்பு வசதிகளை அமைச்சர் தனது நிதி ஒதுக்கீட்டில் ஏற்கனவே இருந்து வழங்கியிருந்தார்.

அத்துடன் தமக்கு நிலவிய நீண்டகாலத் தேவை பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும், இம்மின்சார வசதியானது இப்பிரதேசத்தின் சிறுவர்களது கல்வி வளர்ச்சியில் பெரிதும் பங்களிக்குமெனவும் பிரதேசவாசிகள் நன்றி தெரிவித்தனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites