Tuesday , August 26 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்

நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்

நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்

‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராமனின் மகள். பின்னர் நடன இயக்குனர் ஆனார். இப்போது திரைப்பட இயக்குனராக மாறி இருக்கிறார்.

படம் பற்றி கூறிய காயத்ரி ரகுராம்…

“கவர்ச்சிகரமான சினிமா உலகில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கும், உலகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கதை. நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தை இயக்குகிறேன்.

அவர்களுடைய கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சொல்லும் படம். குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதாரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள்.

ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே ‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் கதை” என்றார்.

நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …