Monday , November 18 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / சிரியா மக்களின் உயிர்களை காப்பாற்றுமா ஐநா சபை?

சிரியா மக்களின் உயிர்களை காப்பாற்றுமா ஐநா சபை?

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விவாதித்துள்ளது.

சிரியா அரசு, கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா நகரை மீட்பதற்காக ரஷ்யா படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் 400 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். பலியானவர்களில் 95-க்கும் மேற்பட்டோர் சின்னஞ்சிறு குழந்தைகள் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டாலும், பயங்கரவாதிகளிடம் இருந்து கவுட்டா நகரை விடுவிப்பதற்குத்தான் தாக்குதல் நடைபெறுவதாக சிரியா அரசு கூறுகிறது.

இந்நிலையில் ஐநா பாதுகாப்புக் கவுன்சில், கவுட்டா நகரில் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக விவாதம் மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் இன்று அல்லது நாளை முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv