கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மதுரை மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் வினோத் குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் சுப்பு உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.