​பெற்ற தாயை துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த மகன்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ராஜஸ்தான் மாநிலம் ஷாஜஹான்புர் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஜனவரி 18ம் தேதி உயிரிழந்தார். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

அப்போது அவரது மகன் அடித்து துன்புறுத்தியதால் மூதாட்டி இறந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், மூதாட்டியை அவரது மகன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இது தொடர்பாக ஜோகேந்திரா சவுத்ரி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தாயை பெற்ற மகனே துன்புறுத்திக் கொலை செய்யும் காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த மனிதத்தன்மையற்ற செயலை செய்த அவருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டுமென வலைத்தளவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

https://youtu.be/T3B-siME258

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *