Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / காணா­மல்­போன சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பில் ஐ.நாவில் குழப்­பம்

காணா­மல்­போன சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பில் ஐ.நாவில் குழப்­பம்

வடக்­கில் போரின் பின்­னர் காணா­மல்­போன சிறு­வர்­க­ளில் 611பேர் இன்­று­வரை கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன. ஆனால் ஐ.நாவில் இடம்­பெ­றும் 77ஆவது அமர்­வின் சிறு­வர் உரிமை மாநாட்­டில் இலங்கை அரசு கூறிய புள்ளி விவ­ரம் இதிலிருந்து மாறுபட்டுள்ளது. இதனால் ஐ.நா அதி­கா­ரி­கள் அதிர்ச்சியடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜெனி­வா­வில் இடம்­பெ­றும் 77ஆவது ஐ.நா கூட்­டத்­தொ­ட­ரின் சிறு­வர் உரிமை மாநாடு ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. எதிர்­வ­ரும் 2ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இதில் இலங்கை சார்ந்த விட­யம் கடந்த திங்­கள் மற்­றும் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றது. இதில் சிறு­வர்­க­ளின் கல்வி, சுகா­தா­ரம், சட்­டம் தொடர்­பில் அதிக கவ­னம் செலுத்­தப்­பட்­டது.

இதன்­போது இலங்­கை­யில் இடம்­பெற்ற போரின்­போது சிறு­வர்­க­ளும், போரா­ளி­க­ளா­க­வும் ஏனைய வகை­யி­லும் இருந்து அர­சி­டம் சர­ண­டைந்த அனை­வ­ரும் விடு­விக்­கப்­பட்­ட­னரா என்ற கேள்வி அமர்­வில் எழுப்­பப்­பட்­டது. இறு­திப் போரின் பின்­னர் சிறு­வர் போரா­ளி­க­ளாக இருந்த 594 பேர் அரச படை­க­ளி­டம் சர­ண­டைந்­த­னர். இவர்­கள் அனை­வ­ரும் மறு­வாழ்­வின் பின்பு உற­வு­க­ளு­டன் இணைக்­கப்­பட்­ட­னர் என்று ஐ.நாவுக்­கான இலங்­கை­யின் நிரந்­த­ரப் பிர­தி­நிதி ரவி­நாத் ஆரி­ய­சிங்க பதி­ல­ளித்­தார்.

இதன் தொடர்ச்­சி­யாக வடக்கு மாகாண சிறு­வர் நிலமை தொடர்­பி­லும் வடக்­கில் காணா­மல்­போன சிறு­வர்­கள் தொடர்­பி­லும் சபை கவ­னம் செலுத்­தி­யது.

இதன்­போது வடக்­கில் இருந்து கலந்­து­கொண்ட வடக்கு மாகாண தலை­மைச் செய­லா­ளர் ‘இறு­திப் போரின்­போது 2 ஆயி­ரத்து 632 சிறு­வர்­கள் காணா­மல் போன­தாக முறை­யி­டப்­பட்­டது. இதில் ஆயி­ரத்து 689 சிறு­வர்­கள் சமூ­கத்­து­டன் இணைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவ்­வாறு காணா­மல்­போன சிறு­வர்­க­ளில் 611பேர் இன்­று­வரை கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. எஞ்­சிய சிறு­வர்­கள் சிறு­வர் காப்­ப­கங்­க­ளில் உள்­ள­னர் என்று வடக்கு மாகாண சிறு­வர் நன்­ன­டத்­தைத் திணைக்­கள தர­வு­கள் உள்­ளன’ எனப் பதி­ல­ளித்­தார்.

இத­னால் இவ்­வாறு மாறு­பட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் தொடர்­பில் அதிர்ச்சி அடைந்து அதி­கா­ரி­கள் கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ள­னர். இதில் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பில் இணைந்­தி­ருந்த சிறு­வர்­க­ளும் உள்­ள­டக்­கம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­நே­ரம் சிறு­வர்­கள் தொடர்­பான சட்­டம் தொடர்­பில் இலங்­கை­யில் இரு மாறு­பட்ட கருத்து உள்­ள­தா­க­வும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. அத­னால் 16 வயதா அல்­லது 18 வயதா சிறு­வர்­க­ளின் வயது எல்லை என்ற குழப்­ப­க­ர­ மான தன்­மையே காணப்­ப­டு­வ­தா­க­வும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. அதே­நே­ரம் முஸ்­லீம் பெண்­க­ளின் திரு­மண வயது எல்லை தொடர்­பில் தற்­போது 14 வய­தாக இருப்­பது தொடர்­பில் கடும் கருத்­துக்­கள் தெரி­விக்­கப்­பட்­டன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv