ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து சாதனை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து சாதனை

பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை 14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி ஏலம் எடுத்தது.

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைக்கு போன வெளிநாட்டவர் என்ற சிறப்பை பென் ஸ்டோக்ஸ் (ரூ.14½ கோடி) பெற்றார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தியாவின் யுவராஜ்சிங் 2015-ம் ஆண்டு ரூ.16 கோடிக்கு ஏலம் போனதே அதிகபட்சமாக நீடிக்கிறது.

உறுப்பு நாடுகளில் நெதர்லாந்தை சேர்ந்த ரையான் டென் டஸ்சாட் மட்டுமே இதற்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடியிருந்தார்.

இந்த சீசனில் மேலும் மூன்று உறுப்பு நாடு வீரர்கள் அதாவது ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், முகமது நபி ஆகிய இருவர் ஐதராபாத் அணிக்கும், ஐக்கிய அரபு அமீரக வீரர் சிராக் சுரி குஜராத் லயன்சுக்கும் விளையாட உள்ளனர்.

நேற்றைய ஏலத்தில் எடுக்கப்பட்ட 6 இங்கிலாந்து வீரர்களின் மதிப்பு மட்டும் ரூ.34.3 கோடி. அதே சமயம் ஏலம் போன 39 இந்தியர்களின் ஒட்டுமொத்த தொகையை கணக்கிட்டால் ஏறக்குறைய ரூ.10 கோடி தான்.

அதிகபட்சமாக குஜராத் லயன்ஸ் 11 வீரர்களையும், குறைந்த எண்ணிக்கையாக பெங்களூரு அணி 5 வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News