Monday , November 18 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு பிப்ரவரியில் மரண தண்டனை

இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு பிப்ரவரியில் மரண தண்டனை

அமெரிக்காவில் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு பிப்ரவரியில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றது

ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி (வயது 32). மின் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியலில் பொறியியல் படிப்பு படித்துள்ள இவர் எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

61 வயது நிறைந்த இந்திய பெண் மற்றும் அவரது 10 மாத பேத்தி ஆகியோரை பணம் பறிக்கும் திட்டத்துடன் கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2014ம் ஆண்டு நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது.

அவருக்கு வருகிற பிப்ரவரி 23ந்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

யண்டமுரி அமெரிக்காவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் முதல் இந்திய அமெரிக்கராவார்.

எனினும், கடந்த 2015ம் ஆண்டு பென்சில்வேனியா ஆளுநர் டாம் உல்ஃப் மரண தண்டனைக்கு தடை விதித்துள்ள நிலையில் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பென்சில்வேனியாவில் கடந்த 20 வருடங்களில் எந்த மரண தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 1976ம் வருடத்தில் இருந்து 1995 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv