பிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் போல் காத்திருக்கிறேன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

10 ஆண்டுகள் கழித்து நடிகை குஷ்பு நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், பிரசவத்துக்கு காத்திருக்கும் தாயின் மனநிலையுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பட தயாரிப்பு மற்றும் அரசியலில் களமிறங்கிய பின் குஷ்பு நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ள அஞ்ஞாதவாசி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு கூறியதாவது:-

தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அஞ்ஞாதவாசி படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படம் வெளியாவதை பிரசவத்துக்கு காத்திருக்கும் தாயின் மனநிலையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என் வயிற்றில் வண்ணத்து பூச்சி பறப்பது போன்று உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *