Monday , November 18 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அதிமுக இருக்கும் போது எதற்கு தனிக்கட்சி?

அதிமுக இருக்கும் போது எதற்கு தனிக்கட்சி?

தனிக்கட்சி தொடங்கும் திட்டமில்லை என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அதன் தொடர்ச்சியாக, 100க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களை நிர்வாகிகள் பதவிகளிலிருந்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு நீக்கியது. எனவே, அவர்களுக்கு பதவி கொடுக்கும் வகையில், டிடிவி தினகரன் பேரவை அல்லது தனிக்கட்சி ஒன்றை தொடங்குவார் என செய்திகள் வெளியானது.

ஆனால், அதை டிடிவி தினகரன் மறுத்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் “அதிமுக இருக்கும் போது நான் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும். அதுதான் எங்கள் கட்சி. அந்த கட்சி தற்போது துரோகிகளிடம் சிக்கியுள்ளது. விரைவில் அதை மீட்போம். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என அவர் தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv