வறட்சி நிவாரணம் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
வறட்சி நிவாரணம் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

வறட்சி நிவாரண தொகை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தண்ணீர் பிரச்சினை குறித்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்முறையாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

2016 சட்டசபை தேர்தலில் புரட்சித்தலைவி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அது படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் இன்று 5 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா அறிவுரையின்பேரில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளேன்.

வறட்சி நிவாரண தொகை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தண்ணீர் பிரச்சினை குறித்து நான் ஏற்கனவே அறிவித்து இருக்கிறேன். பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News