2018 புத்தாண்டுத்தினக்கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்.சென்னை போலீசார் அதிரடி.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று சிறப்பான கொண்டாட்டம் நடைபெறும். குறிப்பாக மெரீனா அருகே உள்ள காமராஜர் சாலை, அண்ணா சாலை, பெசண்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் மிக அதிக அளவில் கூட்டம் காணப்படும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் அறிவித்துள்ளனர். புத்தாண்டு தினத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க சுமார் 3500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனதாகவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் மைலாப்பூர் திருவல்லிக்கேணி உள்ளிட்ட 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் நடத்தப்படும் என்றும், 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உதவி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மெரினா, சாந்தோம் நீலாங்கரை கடற்கரைகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களாக கணிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஏடிவி எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றும், கிண்டி தரமணி உள்ளிட்ட இடங்களில் 20 இருசக்கர பந்தய வாகன தடுப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றும், ஒரு காவல் நிலையத்திற்கு 10 வாகனங்கள் வரை ரோந்து பணியில் ஈடுபடும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
 
போலீசாரின் அதிக கெடுபிடியால் இந்த ஆண்டு குடும்பத்தோடு வெளியில் செல்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுவதால் கடந்த சில ஆண்டுகள் போல் இருக்குமா? அல்லது களையிழக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *