உளவுத்துறை அறிக்கையால் எடப்பாடி அதிர்ச்சி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்து கணிப்புகள் கூறுகிறது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்நிலையில், அந்த தொகுதியில் கடந்த 21ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

சுயேட்சை வேட்பாளர்களோடு சேர்த்து 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக மற்றும் தினகரன் ஆகிய மூவருக்கும் இடையே மட்டுமே பலத்த போட்டி நிலவுகிறது.

அந்நிலையில், தேர்தலுக்கு முன்பு அந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என சில கருத்து கணிப்புகள் எடுக்கப்பட்டது. அதில், குக்கர் சின்னத்தில் போட்டியிடும் தினகரனே வெற்றி பெறுவார் என செய்திகள் வெளியானது. அதேபோல், தேர்தலுக்கு பிந்தைய சில தேர்தல் கணிப்பிலும் அவரே வெற்றி பெறுவார் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி நிலவரப்படி, தமிழக உளவுத்துறை அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளதாம். அதில், மொத்தமாக ஓட்டுகள் பதிவான 1,77,074 வாக்குகளில் கீழக்கண்டவாறு வாக்குகள் பிரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

மொத்த வாக்குகள் – 1,77,074

பிஜேபி, நாம் தமிழர், சுயேட்சை சேர்த்து – 12,074 வாக்குகள்

டிடிவி தினகரன் – 65,000 வாக்குகள், அதாவது 36 சதவீத வாக்குகள்

திமுக – 55,000 வாக்குகள், அதாவது 31 சதவீதம்

அதிமுக – 45,000 வாக்குகள், அதாவது 26 சதவீதம்

(2000 முதல் 5000 வரை மாறுதலுக்குட்பட்டது)

என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *