அடேய்… எல்லை மீறி போறீங்க

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சமீபத்தில் வெளியான ஜெயலலிதாவின் வீடியோவில் நெட்டிசன்கள் சில சிக் ஜாக் வேலைகள் செய்து மீம்ஸ்களா இணையத்தில் உலவ விட்டுள்ளனர்.

மறைந்த முதவ்லர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்டது என ஒரு வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ஜெயலலிதாவை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட போது அந்த வீடியோ எடுக்கப்பட்டது எனவும், சசிகலாவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைப்பழியை நீக்கவே இந்த வீடியோவை வெளியிட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த புகைப்படத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சேர்த்து மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் உலவ விட்டுள்ளனர்.

ஜெ.விற்கு அருகில் உள்ள படுக்கையில் கருணாநிதி படுத்திருப்பதாக ஒரு புகைப்படத்தை ஏற்கனவே உலவிட்டனர். தற்போது, சிகிச்சையில் இருக்கும் ஜெ.வை கருணாநிதி சந்திப்பது போல் ஒரு புகைப்படத்தை எடிட் செய்து உலவ விட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *