முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு இன்னும் மர்மமாகவே தான் உள்ளது. பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஜெயலிதா நோயாளிகளுக்கான பெட்டில் உட்கார்ந்த நிலையில் இருக்கிறார். அவருக்கு வெண்டிலேசன் என சொல்லப்படும் சுவாசிக்கும் கருவி, பிரஷர் கருவி பொருத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்.
மேலும் அவர் டிவி பார்த்துக்கொண்டே திரவ உணவை குடிப்பது போல இருக்கிறது. இது அப்பல்லோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டது தானா? இல்லை போயஸ் இல்லமா?
வீடியோவில் இருப்பது யார்? இது உண்மைதானா? என பல குழப்பங்கள் அதுவும் இந்த தேர்தல் நேரத்தில். வீடியோவை வெளியிட்டது குக்கர் கும்பல் தான் சிலர் சொல்கின்றனர்.