விரக்தியில் குடும்பமே தற்கொலை!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திருப்பூரில் இளைஞர் ஒருவர் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கலப்புத் திருமணம் செய்து கொண்டதால், விரக்தியில் இளைஞனின் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்தவர் முருகன்(50). இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், பானுப்பிரியா என்ற மகளும், பாண்டியராஜன் என்ற மகனும் இருந்தனர்.

முருகன் டீ எஸ்டேட் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மகள் பானுப்பிரியா அருகில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். மகன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

வேலை செய்யும் இடத்தில் வேற்று சமூக பெண்ணை காதலித்து வந்த பாண்டியராஜன், இந்த விஷயத்தை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் குடும்பம் வசித்துவந்த மறையூர் பகுதி சுற்றுவட்டாரத்தில், குறிப்பிட்ட 18 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களின் உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற வழக்கம் இருந்துள்ளது.

இதனை மீறும் பட்சத்தில் மொத்த குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு பாண்டியராஜனின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி பாண்டியராஜன் திருமணம் செய்து கொண்டார். இதனால் மறையூர் மக்கள் அவர்களின் குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பாண்டியராஜனின் பெற்றோர் குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *