​ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் நிறைவடையும் பிரச்சாரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், அத்தொகுதியைச் சாராதவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு மேல் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம்(டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சியான எடப்பாடி அணியினரும், ஆளுங்கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்கட்சியும், சுயேச்சையில் போட்டியிடும் டிடிவி தினகரனும் மற்றும் இதர சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு, ஓட்டுக்கு 6000 ரூபாய் கொடுப்பதாக வந்த புகாரின் பேரில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாளை மறுதினம் ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

அதன்படி இன்று மாலை 5 மணியோடு ஆர்.கே நகரை சாராதவர்கள் அனைவரும் அத்தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *