13 லட்சம் ரூபாய் செலவில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடமாலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு 13 லட்சம் ரூபாய் செலவில் வடமாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் 18 அடி உயரம் கொண்ட வடமாலையை சுவாமிக்கு அணிவித்துள்ளனர். இந்த வடமாலை ஒரு லட்சத்து ஆயிரத்து எட்டாயிரம்(1,08,000) வடைகளை கொண்டுள்ளது. பதிமூன்று லட்சம் ரூபாய்(13,00,000) செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கோயிலை அலங்கரிப்பதற்காக 4 டன் பூக்கள் தொடுக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் முழுவதும் பூக்களைக் கொண்டும், பழங்கள், கரும்பு, தென்னங்குருத்து கொண்டும் அலங்கரிக்கப்பட்டு இருப்பதால் திருப்பதியைப் போல் காட்சியளிக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *