Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / திரும்பிவாருங்கள்; ஈழ அகதிகளுக்கு ரணில் அழைப்பு

திரும்பிவாருங்கள்; ஈழ அகதிகளுக்கு ரணில் அழைப்பு

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத புகலிடம்கோரி படகுகளில் சென்று அந்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல்லை கன்பராவில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போதே அவுஸ்ரேலியப் பிரதமருக்கு அருகே நின்று, ஸ்ரீலங்கா பிரதமர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்குத் தப்பிச் செல்லவதற்காக இலங்கையர்கள் சட்டத்தை மீறியுள்ளனர். ஆனால், நாடு திரும்பினால், சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ளமாட்டார்கள். திரும்பி வாருங்கள், எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டது” என்று ஸ்ரீலங்கா பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …