சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு
சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை முன் மொழிந்தார். இதையடுத்து அவரை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.
முன்னதாக செங்கோட்டையன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. கடைசியில் எடப்பாடியை தேர்வு செய்துள்ளார் சசி. இந் நிலையில் கூவத்தூரில் பெரும் பரபரப்பு நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்துவிட்டனர். அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி விரைவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.