பச்சிளம் குழந்தையின் சடலத்தை வாயில் கவ்விச் சென்ற நாய்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தையின் சடலத்தை நாய் வாயில் கவ்விச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாகர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிவதாக சமீபத்தில் புகார் எழுந்தது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு வெளியே, நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் சடலத்தை வாயில் கவ்விச் சென்றதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும் அந்த குழந்தை யாருடையது என்பது உடனடியாக தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *