போராளிகள் இணைந்து தமிழீழ விடுதலைப்போரின் முதல் மாவீரர் லெப்.சங்கர் அண்ணாவின் நினைவுத்தூபி அமைந்துள்ள சதுக்கத்தில் மிகவும் நேர்த்தியாக ஒழுங்குசெய்த மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு அமைதியாக தாயகத்தை கண்முன்னே நிறுத்தி நின்றது.
மேலும் சிறப்பாக எமது 1066 மாவீரர்களது திருவுருவப்படங்களையும் தரிசிக்க பிரஞ்சுநாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும் , சார்சல் மாநாகர முதல்வரும், வல்துவாஸ் மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரியும் , சார்சல் மாநகரசபை பிரமுகர்களும் வந்திருந்தார்கள்.
முக்கியமாக பிரான்சு நாட்டின் முன்னால் வெளிவிவகார அமைச்சர் திரு பேர்னாட் குஸ்னர் அவர்களும் கலந்துகொள்வதாகவே தீர்மானிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தவிர்க்க முடியாத காரணத்தால் அவரால் சமூகமளிக்கமுடியவில்லை அடுத்த நிகழ்வுக்கு நிச்சயமாக சமூகமளிப்பதாக உறுதியளித்துள்ளார், போராளிகளும் இணைந்து நின்று உணர்வுப்பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய விதத்தை அமைதியாக நின்று அவதானித்த பிரான்சு நாட்டின் பிரதிநிதிகளின் உரை தமிழீழத்தையும் , தமிழீழ விடுதலைப்புலிகளையும் சர்வதேசம் பயங்கரவாதிகளாக பார்த்தது மிகப்பெரிய தவறு என்று நேரடியாக குற்றம் சாட்டியதற்கப்பால் , இனி வரும் காலத்தில் எமது இனத்தின் விடுதலைக்கு தம்மாலான உதவிகளை செய்வதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் பதிவு செய்தார்கள்.
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆழாக்கப்பட்டுவருவதை தாம் உணர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்களுடன் தற்போது பதவியில் இருக்கும் ஒரு நகரமுதல்வர் பதிவு செய்தது தமிழீழம் சர்வதேச அங்கிகாரத்தை அண்மித்து விட்டதை மாவீரர்கள் முன்னிலையில் உணர்த்தி நின்றது.





