போர்க்குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணம் செய்யப்பட்டதால் நீதிபதி முன்னே விஷம் அருந்தி முன்னாள் ராணுவ தளபதி தற்கொலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கடந்த 1992 – 1995 ஆண்டுகளில் நடந்த போஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

போரின் போது 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐநா தீர்ப்பாயம் ஒன்றை அமைத்தது.

இந்த போர் நடைபெற்ற சமயத்தில் போஸ்னிய ராணுவத்தின் தளபதியாக செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்ததோடு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை முடிவில் சர்வதேச நீதிமன்றம், குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் 20 ஆண்டுகள் சிறை தண்டைனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனால்,அதிர்ச்சி அடைந்த ஸ்லோபோதன் ப்ரால்ஜக், தான் நிரபராதி என கூறியவறே, நீதிபதி கண்முன்னே குப்பியில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார்.

இதனையடுத்து, மருத்துவர்களை வரச்சொல்லிவிட்டு கோர்ட் ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக ஹேக் நகர போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *